கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - கோயம்புத்தூர் இடையேயான இரயில் சேவையை மீண்டும் இயக்க கோரி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, மதுரை கோட்ட தென்னக ரயில்வே, மண்டல மேலாளருக்கு அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-
தூத்துக்குடி - கோயம்புத்தூர் இடையே இயக்கப்பட்டு வந்த இணைப்பு இரயிலானது பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கொரோனா பரவல் கால கட்டத்தில் இந்த சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் நீங்கிவிட்ட நிலையில், இந்த இரயில் சேவை தொடராமல் இருப்பதால் தூத்துக்குடி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, கல்லூரி மாணவ மாணவியர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட இந்த இரயில் சேவையை உடனே தொடங்க நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். என அதில் தெரிவிக்கப்பட்டிருந்து.