• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மீனவர்கள் எல்லைதாண்ட வேண்டாம் : ஆட்சியர் அறிவுறுத்தல்

  • Share on

தூத்துக்குடி மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து மீன்பிடி தொழில் புரிவதனால் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாவதுமான நிலை ஏற்படுகிறது. 

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லை கடந்து மீன்பிடி தொழில் புரியும் போது சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டு, சமூக விரோதிகள் தப்பிக்கும் வாய்ப்பு உருவாகிறது. கடல் எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும் போது இந்திய - இலங்கை கடல் எல்லையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உருவாகிறது. எனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், அதனை மீறி மீன்பிடி தொழில் மேற்கொள்ளும் படகுகளுக்கு முதல் மூன்று முறை அபராதம் விதிக்கப்படும் (ரூ.1,000/-, ரூ.2,500/-, ரூ.5,000/-) நான்காவது முறை எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும் போது ஒரு வார காலத்திற்கு மீன்பிடி தொழில் புரிய தடைவிதிக்கப்படும். நான்கு முறைகளுக்கு மேல் எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும் போது படகு உரிமம் இரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  தெரிவித்துள்ளார்.

  • Share on

டிஐஜி பிரவின்குமார் அபிநபு ஆய்வு

பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற ஓர் வாய்ப்பு

  • Share on