• vilasalnews@gmail.com

'மதத்தை மதித்து மனிதநேயத்தை வளர்ப்போம்' - பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேச்சு!

  • Share on

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜபாளையம் சக்ரெட் ஹார்ட் மெட்ரிகுலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.  

விழாவில் அருட்.சகோதரி மரியநேசம் தலைமை வகித்தார். கராத்தே மாஸ்டர் முத்துசங்கர் குமார் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, மாணவ,மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், கிறிஸ்துவ கீத ஆராதனைகள், இயேசுவின் பிறப்பு குறித்த நிகழ்வுகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் பேசுகையில்: 

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல ஒழுக்கத்துடன் குழந்தை செல்வங்கள் படிக்க வேண்டும். மதத்தை மதிப்போம், மனித நேயத்தை வளர்ப்போம். ஒற்றுமையை பேணி பாதுகாப்போம். மக்கள் நலன் ஒன்றே தான் முக்கியம் என்று பணியாற்றுவோம் என்று பேசினார். 

தருவைகுளம் பங்கு தந்தை வின்செண்ட் பேசுகையில்: 

அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும். செல்போன் உபயோகப்படுத்தாமல் குழந்தைகள் படிக்க வேண்டும். ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அனைவரிடமும் நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும், என்றார். 

தூத்துக்குடி வடக்கு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பாட்ஷா பேசுகையில்:

எனது தாய் ஆசிரியராக பணியாற்றினார். நான் ஒரு முஸ்லீமாக இருந்தாலும், நாசரேத் பள்ளியில் 3 வருடம் படித்தேன். தினமும் உணவு உட்கொள்வதற்கு முன்பு எல்லா உயிரினங்களுக்கும் உணவு கிடைத்து வாழ வேண்டும் என்று ஜெபம் செய்து விட்டு தான் உணவை அருந்துவேன். நாம் எப்படி நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதேபோல் எல்லோரும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையோடு வாழ வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன், என்று பேசினார். 

இவ்விழாவில், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட மல்யுத்த சங்க தலைவருமான அம்பா சங்கர், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்: பாரதிராஜா, பெலிக்ஸ், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், மாவட்ட பிரதிநிதி நெல்சன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள்: சுதர்ஸன், ஆம்ஸ்ராங் மற்றும் கௌதம், பள்ளி உதவி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அப்பள்ளியில் மாணவ,மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கோப்பை, கேடயம், மெடல், சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததையும், அறிவியல் சார்ந்த தயாரிப்பு பொருட்களையும் பள்ளியின் அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவரும் பார்வையிட்டனர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி சாராள் ரோஸ் நன்றியுரையாற்றினார்.

  • Share on

தூத்துக்குடியில் மாநகர திமுக இளைஞரணி சார்பில் மெகா மருத்துவ முகாம்!

எட்டையபுரத்தில் ஜெயலலிதா நினைவு தினம் : நகர அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை!

  • Share on