• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மாநகர திமுக இளைஞரணி சார்பில் மெகா மருத்துவ முகாம்!

  • Share on

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு மாநகர திமுக இளைஞரணி சார்பில் மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் மாநகர திமுக இளைஞரணி சார்பில், சிவன் கோவில் தெருவில் உள்ள தனியார் மஹாலில் வைத்து மெகா மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு, தூத்துக்குடி மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியேல் ராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாமில், சென்னை அப்பல்லோ, சென்னை காவேரி மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிஷன், நெல்லை அருணா கார்டியோ கேர், நாகர்கோவில் திரவியம் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளின் பங்களிப்போடு, கேன்சர் நோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய் சிகிச்சை, மூட்டு வலி, முதுகு வலி, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்டவைகளுக்கான  இலவச சிறப்பு சிகிச்சை மற்றும் பரிசோதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காலியாக உள்ள கிராம உதவியாளருக்கு எழுத்து தேர்வு!

'மதத்தை மதித்து மனிதநேயத்தை வளர்ப்போம்' - பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேச்சு!

  • Share on