• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காலியாக உள்ள கிராம உதவியாளருக்கு எழுத்து தேர்வு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளருக்கு ( தலையாரி ) நாளை எழுத்து தேர்வு நடக்கிறது. விண்ணப்பம் செய்தவர்கள் இதற்கான தேர்வினை எழுதலாம்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் காலை பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் நாளை ( 4.12.2022 ) ஞாயிற்றுக்கிழமை எழுத்து தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி தாலுகாவில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி ஏபிசி வீரபாகு மெட்ரிகுலேஷன் பள்ளி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளியிலும், திருச்செந்தூர் தாலுகாவில் வீரபாண்டியன் பட்டினம் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஏரல் தாலுகாவில் சாயர்புரம் போப் கல்லூரியிலும், சாத்தான்குளம் தாலுகாவில் சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் நேஷனல் மேல்நிலைப் பள்ளியிலும்,

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பலம் ஸ்ரீனிவாசா நகர் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், எட்டயபுரம் தாலுகாவில் குமார கிரி இளம்புவனம் சிகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கீழஈரால் டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,

கயத்தாறு தாலுகாவில் கயத்தாறு அன்னை நகர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கோவில்பட்டி தாலுகாவில் கோவில்பட்டி கே.ஆர்.நகர் நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், விளாத்திகுளம் தாலுகாவில் நாகலாபுரம் மகாராஜபுரம் சீனி மெட்ரிக்குலேஷன் பள்ளி, விளாத்திகுளம் கே.ஆர்.நகர் கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் நினைவு மேல்நிலைப் பள்ளி, விளாத்திகுளம் வில்வமரத்துப்பட்டி ஷாரோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடக்கிறது.

காலை 9:30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50 க்கு பின்னர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 10.50 மணிக்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்களௌ. அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதிச்சீட்டு மற்றும் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை தவிர வேறு எந்த பொருளும் தேர்வு அறைக்குள் கொண்டுவரக் கூடாது.

  • Share on

படாரென மாணவி.. சட்டென தடுத்த கனிமொழி எம்பி!

தூத்துக்குடியில் மாநகர திமுக இளைஞரணி சார்பில் மெகா மருத்துவ முகாம்!

  • Share on