• vilasalnews@gmail.com

படாரென மாணவி.. சட்டென தடுத்த கனிமொழி எம்பி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவில் பரிசு பெற்ற மாணவி ஒருவர் கனிமொழி எம்பியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பொழுது இப்படியெல்லாம் செய்ய கூடாது என அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ஆவது புத்தக திருவிழா கடந்த 22-ஆம் தேதி முதல் 29-ஆம் வரை தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவின் நிறைவு விழா கடந்த 29 ஆம் தேதி நடைபெற்றது.

அந்த நிறைவு விழாவில் பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு தூத்துக்குடி எம்பி கனிமொழி பரிசுகளை வழங்கினர்.

அப்போது, கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி விஷாலிக்கு பதக்கத்தை அணிவித்த கனிமொழி, ஆட்சியர் செந்தில்ராஜிடம் நிகழ்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது சட்டென எதிர்பாராத விதமாக விஷாலி கனிமொழி எம்பியின் காலில் விழுந்தார். இதனால் உடனே சட்டென சுதாரித்த  கனிமொழி, இப்படியெல்லாம் செய்யக் கூடாது என அந்த மாணவிக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் மாணவியை தோளோடு அணைத்த கனிமொழி பாராட்டுகளை தெரிவித்ததுடன் யார் காலிலும் விழக் கூடாது என சுயமரியாதை குறித்த புரிதலை விளக்கினார். அந்த மாணவியும் தலை அசைத்துவிட்டு சென்றார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share on

விளாத்திகுளத்தில் மிளகாய் பயிருக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காலியாக உள்ள கிராம உதவியாளருக்கு எழுத்து தேர்வு!

  • Share on