விளாத்திகுளம் வட்டார பகுதிகளில் மிளகாய் பயிருக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டார பகுதி விவசாயிகளுக்கு மிளகாய் பயிருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும், தமிழக அரசே இன்சூரன்ஸ் நிறுவனம் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமையில், மாவட்டத் தலைவர் ராகவன் முன்னிலையில் வேளாண் விரிவாக்கம் மையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.