• vilasalnews@gmail.com

பின்தங்கிய பகுதிகளை சீர்மிகு நகர்புறத்தரத்தில் மேம்படுத்திட வேண்டும் - மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் மந்திரமூர்த்தி கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், தனது 51 வது வார்டுக்கு உட்பட்ட சில பகுதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே அப்பகுதிகளை சீர்மிகு நகர்புறத்தரத்தில் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் மந்திர மூர்த்தி கோரிக்கை வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி வளாகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள சாலை, கால்வாய், குடிநீர், ஆக்கிரமிப்பு, பூங்கா பாராமரித்தல், மழைநீர் அகற்றுதல் போன்ற குறைகள் குறித்து தெரிவித்தனர்.

அப்போது,  51 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினரும், மாமன்ற எதிர்கட்சி கொறடாவுமான வழக்கறிஞர் மந்திர மூர்த்தி பேசுகையில்:-

தனது 51 ஆவது வார்டு பகுதிக்குட்பட்ட இந்திரா நகர், திரு.வி.க நகர்,காதர் மீரான் நகர்,பெரியசாமி நகர்,  ஊரணி ஒத்த வீடு, வீரநாயக்கன் தட்டு, முடுக்கு காடு உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர்  தேங்காத வண்ணமும், இந்திரா நகரில் உள்ள பாலம், தனிநபருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள  தண்ணீரானது நாளடைவில் பச்சை நிறமாக மாறி சுகாதார சீர் கேடு ஏற்படும் நிலை உண்டாகிறது. ஆகவே பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அப்பகுதியில் தண்ணீரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டியும், 

பெரியசாமி நகர், ஊரணி ஒத்த வீடு ஆகிய பகுதிகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும், அங்கு அனைத்து விதமான கட்டமைப்புகளும் செய்து சீர்மிகு நகர்புறத்தரத்தில் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் பேசி கோரிக்கை வைத்தார். 

அதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

  • Share on

விளாத்திகுளம் அருகே பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கு - இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

விளாத்திகுளத்தில் மிளகாய் பயிருக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

  • Share on