• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கு - இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

  • Share on

விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூத்துக்குடி மகளிர் விரைவு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீராவிபட்டி பகுதியைச் சேர்ந்த கவுண்டமணி மகன் அழகுராஜ் (30) என்பவர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2015 ஆண்டு பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து  அழகுராஜ் என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலெட்சுமி புலன் விசாரணை செய்து கடந்த 06.07.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி  மாதவ ராமனுஜம் அவர்கள் இன்று (30.11.2022) குற்றவாளியான அழகுராஜ் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  சுப்புலெட்சுமி , குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சங்கீதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

  • Share on

டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நடைமுறைபடுத்த கால அவகாசம் - வணிகவரித்துறை இணை ஆணையரிடம் கோரிக்கை!

பின்தங்கிய பகுதிகளை சீர்மிகு நகர்புறத்தரத்தில் மேம்படுத்திட வேண்டும் - மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் மந்திரமூர்த்தி கோரிக்கை!

  • Share on