உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு, திம்மராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பேரூரணி சமத்துவபுரம் தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று நோட்டு புத்தகங்கள் பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதா கிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோரது ஆலோசனையின்படி,
திம்மராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பேரூரணி சமத்துவபுரம் தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் புதூர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் முடிவை ஆறுமுகம், ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் நாராயணன், மாவட்ட பிரதிநிதி வாகை கணேசன், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி, ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் முடிவை வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைக் செயலாளர்கள் சின்ன பிச்சையா, விஆர் பட்டி கணேசன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் , மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய துணைச் செயலாளர் பேரூரணி ஜெயராஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஓட்டக்காரன், சமத்துவபுரம் கிளைக் செயலாளர் வெள்ளதுரை ஆகியோர் செய்திருந்தனர்.