• vilasalnews@gmail.com

எட்டையபுரத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி - அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் மும்மரம்!

  • Share on

எட்டையபுரத்தில்  வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஈடுபட்டார்.

இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக கடந்த 09.11.2022 அன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு, சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி 09.11.2022 முதல் 08.12.2022 வரை நடைபெறும் என்றும், நவம்பர் 12, 13 - சனி, ஞாயிறு மற்றும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்கு சாவடிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில், எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள புதிய வாக்காளர்கள் விவரங்களில் பெயர், முகவரி உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்றும் அவற்றில் பிழை இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து அவற்றை சரி செய்ய விண்ணப்பங்கள் வழங்கச் செய்தார்.

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணி - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்!

சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வலுப்பெறும் கோரிக்கை!

  • Share on