டேவிஸ்புரம் பகுதியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற தூய்மை பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் அறிவித்த நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கப் பணியில் சாலை பணியாளர்கள் தங்களையும் இணைத்துக் கொண்டு அரசு விடுமுறை நாளில் மாதம் ஒரு நகரம், மாநகரம், ஊராட்சிகளை தேர்வு செய்து தீவிர தூய்மை பணியில் ஈடுபடுவது என்று கடந்த ஜூன் மாதம் பெரம்பலூரில் நடந்து முடிந்த 7வது மாநில மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு தேதியில் தூய்மை பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்,டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட டேவிஸ் புரத்தில், கருவேலமரங்கள் சூழ்ந்து, குப்பைகளோடு புதர் மண்டி கிடக்கும், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊர் பொது கிணறு நந்தவனம் பகுதியை சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, இன்று அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக நடைபெற்ற தூய்மை பணி தொடக்க விழாவிற்கு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜா தலைமை வகித்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் மரம் நட்டு வைத்து தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சாலை ஆய்வாளர் குற்றாலிங்கம், மாவட்ட தலைவர் பழனிச்சாமி, செயலாளர் செம்புலிங்கம், பொருளாளர் அண்ணாதுரை, விருதுநகர் மாவட்ட தலைவர் முத்துச்சாமி, செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் ராஜா, நெல்லை மாவட்ட தலைவர் மாரிபாண்டி, செயலாளர் சங்கரபாண்டியன், பொருளாளர் சங்கரலிங்கம், உட்கோட்ட பொறுப்பாளர்கள் மாடசாமி, அரிபுத்திரன், தங்கவேல், பாலசுப்பிரமணியன், அருளானந்தம், ஜெயக்குமார், ஆறுமுகநயினார், வெள்ளச்சாமி, சத்தியநாதன், ராஜ்குமார், எட்வர்ட், ஜான்சன், தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி சப்பானிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரி காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆனந்தகுமார், சக்திவேல், கௌதம் மற்றும் சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.