
கோவில்பட்டியில் பெட்டிக்கடைக்குள் புகுந்து செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் அய்யனார் (36) என்பவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 09.11.2022 அன்று அய்யனார் அவரது செல்போனை தனது பெட்டிக்கடையில் வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த செல்போன் காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து அய்யனார் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ரத்தினம் (35) என்பவர் மேற்படி அய்யனாரின் பெட்டிக்கடைக்குள் புகுந்து செல்போனை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசாமி வழக்கு பதிவு செய்து ரத்தினத்தை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 12,000 மதிப்பிலான செல்போனையும் பறிமுதல் செய்தார்.