• vilasalnews@gmail.com

குளத்தை ஆக்கிரமித்துள்ள முட்புதர்கள், ஆகாயத்தாமரைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

  • Share on

ஸ்ரீவைகுண்டம் கோட்டம் பொதுபணித்துறைக்கு சொந்தமான குளங்களில் உள்ள முட்புதர்கள், ஆகாயத்தாமரைகளை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கோட்டம் பொதுபணித்துறைக்கு சொந்தமான வடகால் பாசனத்தைச் சேர்ந்த பேய்குளம், தங்கம்மாள்புரம், போடம்மாள்புரம், சிவஞானபுரம் பகுதிகளில் உள்ள குளத்தில் முட்புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை(Water hyacinths, Algae) நிறைந்து ஆக்கிரமித்து உள்ளது.

தங்கம்மாள்புரம் முதல் பேய்குளம் சாலையில் உள்ள மக்கள் குளிக்கும் படித்துறை பகுதியிலும், சிவஞானபுரம் படித்துறை, சேர்வைகாரன் மடம், சக்கம்மாள்புரம் பகுதியிலும், பேய்குளம் பாலம் பகுதியிலும் இந்த தாமரை நிறைந்து அசுத்தமாகவும், துர்வாசனையும் வீசுகிறது. குளிக்கும் மக்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. 

எனவே, பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டும், குளங்களில் உள்ள முட்புதர்கள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, சேர்வைக்காரன்மடம் ஊராட்சி துணைதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா, வார்டு உறுப்பினர்கள்  காளிஸ்வரி வெற்றிவேல், கோபி, சித்ரா ஜெயக்குமார், சந்திரசேகர், குணபாலன் மற்றும் ஊர் பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலையில் பெயர் பலகையை அழிப்பு - எம்ஜிஆர் இளைஞர் அணி கண்டனம்!

கோவில்பட்டியில் பெட்டிக்கடைக்குள் புகுந்து செல்போனை திருடியவர் கைது!

  • Share on