மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட டி.சவேரியார்புரத்தில் புதிதாக கட்டப்பட உள்ள நியவிலைக்கடை பூமி பூஜையில் சண்முகையா எம்.எல்.ஏ, ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட டி.சவேரியார்புரத்தில் இயங்கி வந்த நியவிலைக்கடை கட்டிடம் பழுதாகி இருந்ததால் புதிதாக கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ சண்முகையாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை டி.சவேரியார்புரத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.
இதில் பாதிரியார் குழந்தைராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, திமுக ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி, ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் தளவாய், பணிமேற்பார்வையாளர் முத்துராமன், ஊர்த்தலைவர் பிரான்சிஸ், நிர்வாகி ராயப்பன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.