• vilasalnews@gmail.com

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்ற வேண்டும் - ஆட்சியர் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனங்களில் கூடுதலாக முன்னும் பின்னும் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை (BULL BAR) உடனடியாக அகற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வாகனங்களில் முன்னும் பின்னும் கூடுதலாக பம்பர்கள் (BULL BAR) பொருத்தப்படுவதால் வாகன விபத்து ஏற்படும் போது வாகனத்தில் உள்ள காற்று பைகள் (Air Bags) தானாக திறக்க விடாமல் மேற்படி BULL BAR தடுத்துவிடும் காரணத்தினால் வாகன ஓட்டுநர் மற்றும் பயணிகள் விபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை மற்றும் வாகனத்தின் சேதமானது கனிசமான அளவில் குறைக்க இயலாத நிலை ஏற்படுகிறது.

Air bag பொருத்தப்படாத வாகனங்களிலும் இந்த வகையான bull bar பொருத்தப்பட்டிருக்கும் காரணத்தினால் விபத்தின் போது அதிக அதிர்வுகள் ஏற்படுவதால் ஓட்டுநர்/பயணிகளின் உயிரினை காப்பாற்ற இயலாத சூழ்நிலை ஏற்படுகின்றது. எனவே மத்திய அரசு அறிவிக்கை எண். RT11021/38/2017-MVL  நாள்: 07.12.2017- மற்றும் முதன்மை செயலர்/போக்குவரத்து ஆணையர், சென்னை அவர்களின் கடிதம் ந.க.எண். 41148/HB2/2019 நாள்: 10.01.2020 படி அனைத்து வகையான மோட்டார் வாகனங்களில் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 52க்கு புறம்பாக BULL BAR பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது பிரிவு 190 மற்றும் 191ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனங்களை வைத்துள்ள பொது மக்கள் உடனடியாக தங்களது வாகனத்தில் சட்டத்திற்கு புறம்பாக முன்னும் பின்னும் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை (BULL BAR)-ஐ உடனடியாக நீக்கிடுமாறும் தவறும் பட்சத்தில் போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள் மூலம் அபராத தொகை ரூ.5000 விதிக்கப்படுவது மட்டுமன்றி வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள BULL BAR-ஐ நீக்கிட போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் வாயிலாக தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் முன்னதாகவே தாங்களாகவே முன்வந்து தங்கள் வாகனங்களில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • Share on

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 97 வது பிறந்தநாள் விழா : 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு வழங்கல்!

டிஐஜி பிரவின்குமார் அபிநபு ஆய்வு

  • Share on