• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் என்சிசி மாணவர்கள் தூய்மை பணி - சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட திரேஸ் நகரில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றதொகுதி, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட திரேஸ் நகரில், மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம் சார்பில், விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தேசிய மாணவர்படை பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஒருநாள் சமூகப் பணியாக தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு, தூய்மை பணியை தொடங்கி வைத்து, தேசிய மாணவர்படை மாணவர்களோடு சேர்ந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்.

இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, திமுக ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினமணி, பள்ளி நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, என்சிசி அதிகாரி ஜீஸஸ் ஆல்பன், கௌதம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது - ரூ.,38,600 பணம், சீட்டுகட்டுகள் பறிமுதல்!

தூத்துக்குடி அருகே புதிய நியாயவிலைக்கடைக்கு பூமி பூஜை - எம்எல்ஏ, ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்!

  • Share on