• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது - ரூ.,38,600 பணம், சீட்டுகட்டுகள் பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடியில் பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர் 

தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று (22.11.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி தாமோதரன் நகர் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான இஸ்ரவேல் மகன் 1) எஸ்தர் ராஜ் (49), கருப்பசாமி மகன் 2) ராஜேந்திரன் (75), இஸ்ரவேல் மகன் 3) செல்வம் ஜெயராஜ் (52), தூத்துக்குடி டூவிபுரம் பகுதியை சேர்ந்த மணி மகன் 4) தனராஜ் (32), தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மகன் 5) பாண்டி செல்வம் (38), தூத்துக்குடி வி.இ ரோடு பகுதியை சேர்ந்த குருசாமி மகன் 6) செல்வராஜ் (50) மற்றும் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியை சேர்ந்த சித்திரைவேல் மகன் 7) சந்தனகுமார் (37) ஆகிய 7 பேரும் சேர்ந்து பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனடியாக மேற்படி போலீசார்  7 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகளையும், ரூபாய் 38,600 பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் நவ.25ல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் என்சிசி மாணவர்கள் தூய்மை பணி - சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on