தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வருகிற 25ம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.25) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகுதிகளை உடைய, தனியாா்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளுடன் முகாமில் பங்கேற்கலாம். தனியாா் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து ஆகாது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.