தூத்துக்குடியில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவர் அணி சார்பில் நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி பீச் ரோடு தூய பனிமயமாதா கோவில் அருகில் நடைபெற்றது.
மாநில மீனவரணி துணை செயலாளார் துறைமுகம் புளோரன்ஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மிசின், எல்இடி டிவி பரிசுகளும் மற்றும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு தையல் மிசின், வேஷ்டி, சேலை, மீனவ தொழில் மக்களுக்கான பணி உபகரண பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஆண்டனி ஸ்டாலின், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ராபர்ட் , வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், வட்டச் செயலாளர் டென்சிங், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்சின், பவானி மார்செல், மெட்டில்டா, நகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், மாநில பேச்சாளர் சரத் பாலா, தலைமை கழக பேச்சாளர் இருதய ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், கனகராஜ், மண்டல தலைவர்கள், பாலகுருசாமி, அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் கேப்ரியல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி நன்றியுரையாற்றினார்.