தூத்துக்குடியில் நாளை (22ம் தேதி) செவ்வாய் கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (22.11.2022) செவ்வாய் கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன்ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம்,
இஞ்ஞாசியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.