• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

  • Share on

புதூர்பாண்டியாபுரம் பாலத்தின் அருகில் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதியம்புத்தூர், புதூர்பாண்டியாபுரம் ஆர்.சி தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் (37) என்பவர் கடந்த 18.11.2022 அன்று புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்பாண்டியாபுரம் பாலத்தின் அருகில், ஒரு திருமண வாழ்த்து போஸ்ட்டரை ஒட்டிக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மகன் அரிக்கிருஷ்ணன் (20) தூத்துக்குடி பி&டி காலனி பகுதியைச் சேர்ந்த மரிய ஆனந்த் மகன் தன்ராஜ் (20) மற்றும் சிலர் முருகனிடம் தகராறு செய்து தவறாக பேசி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன் வழக்குபதிவு செய்து  அரிக்கிருஷ்ணன் மற்றும் தன்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்திய ரவுடி கைது!

கயத்தார் : வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

  • Share on