கூட்டாம்புளி ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அசோகன் அவர்கள் தலைமையிலான போலீசார் நேற்று (20.11.2022) புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை to கூட்டாம்புளி ரோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் புதுக்கோட்டை குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (30) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் ரமேஷை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1,18.000 மதிப்புள்ள 18734 பாக்கெட்டுகள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது ஏற்கனவே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை, கொலை மிரட்டல் உட்பட 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.