• vilasalnews@gmail.com

விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் : அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

  • Share on

காட்டுப் பன்றி, மான்களிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் நிலக்கடலை, உளுந்து, பாசி, கம்பு, மக்கா, வெள்ளைச் சோளம், மல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்கள் பயிரிட்டு உள்ளனர், ஆடிப் பட்டம் தேடிவிதை என்ற பழமொழிக்கேற்ப முதற்கட்டமாக ஆடிப்பட்டத்தில் கோவில்பட்டி கோட்டம் முத்துலாபுரம் குறுவட்டம் அயன் ராசா பட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, அயன்வடமலாபுரம், அயன்கரிசல்குளம் போன்ற கிராமங்களில் நிலக்கடலை ஏக்கருக்கு 30கிலோ வீதம் நிலக்கடலை விதை விதைப்பு செய்தனர். 

இக்கடலை மகசூல் காலம் 100 நாட்களாகும். தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. பருவம் தவறி பெய்த மழையால் போதிய அளவு விளைச்சல் இல்லை. தவிர முத்துலாபுரம் குறுவட்டத்தின் மைய பகுதியில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஆறு செல்வதால் ஆற்றுப்படுகையின் வடபுறம் உள்ள விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் மான் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகம் நடமாடுகின்றன. இவைகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து மக்காச்சோளம் பயிர்களை முழுமையாக சேதப்படுத்துகிறது. நிலக்கடலை செடியின் வேரில் முண்டி கடலையை தின்று விடுகிறது. 

தவிர ஒரு மாதத்திற்கு முன்பு பறிக்க வேண்டிய கடலை இயற்கை இடர்பாடுகளால் உரிய நேரத்தில் பறிக்க முடியாமல் போனதால் மண்ணிற்குள். செடியில் விளைந்த கடலை பருப்பு வேரிலேயே முளைத்துவிட்டது. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லை. தவிர மாசார்பட்டி, அயன் ராசாபட்டி, வடமலாபுரம், வெம்பூர், மேலக்கரந்தை, அயன்கரிசல்குளம் கிராமங்களில் மக்காச்சோளம் பயிரை முழுவதுமாக சால் பிடித்து மான், பன்றிகள் திண்று விடுகிறது. 

தவிர இதற்கு முன்னர் வைப்பாறு ஆற்றில் பல ஆண்டுகளாக முளைத்து வனம் போல் காட்சியளித்த வேலிக்கருவை மரங்களின் மறைவிடத்தில் ஒளிந்திருந்து பயிர்களை சேதப்படுத்திய மான்  மற்றும் பன்றிகள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்று எல்கையில் சட்டமன்ற உறுப்பினரின் பெரும் முயற்சியால்  கனரக இயந்திரங்கள் மூலம் வேலிக்கருவைமரங்கள்  அகற்றப்பட்டுவிட்டதால் அவைகள் தற்போது நிலங்கள் மற்றும் கண்மாய்கள் ஒளிந்திருந்து இரவு நேரங்களில் நிலங்களுக்கு வந்து பயிர்களை அழித்து வருகிறது. 

அரசு காட்டுப்பன்றி, மான்களை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும். இல்லை விவசாயிகள் தற்காப்புக்காக அவற்றை வேட்டையாட அனுமதி வழங்க வேண்டும். ஏற்கனவே இந்தாண்டு பயிர்களுக்குபோதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தவிர செடி மற்றும் பயிர்களின் மேல் பகுதியில் விளையக் கூடிய அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய அரசு வழிவகை செய்துள்ளது. நிலத்திற்கடியில் விளையக்கூடிய நிலக்கடலைக்கு மட்டும் ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய அரசு வழி வகை செய்யவில்லை. ஆதலால் ராபி பருவத்தில் நிலக்கடலைக்கும் பயிர் காப்பீடு செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share on

தூத்துக்குடி ஸ்மாட்சிட்டி திட்ட பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுகிறதா? மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் - மாமன்ற எதிர்கட்சி கொறடா ஆவேசம்!

தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்திய ரவுடி கைது!

  • Share on