• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ஸ்மாட்சிட்டி திட்ட பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுகிறதா? மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் - மாமன்ற எதிர்கட்சி கொறடா ஆவேசம்!

  • Share on

தூத்துக்குடியில் ஸ்மாட்சிட்டி திட்ட பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றால், பொதுமக்கள் ஆதரவுடன், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் மாநகராட்சியை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என மாமன்ற எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அரசு வழக்கறிஞரும், 51 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினருமான மந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தூத்துக்குடி மாநகராட்சி 34 வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் 2வது தெருவில் ஸ்மாட்சிட்டி திட்டத்தின் மூலம் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது தரமற்ற முறையில் இருப்பதாக கூறியதோடு, இதனை கண்டித்து இன்று ( 19.11.2022 ) இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் இடத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததோடு, இன்று போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார் 34 வது வார்டு காங்கிரஸ் கட்சி மூத்த மாமன்ற உறுப்பினர் சந்திர போஸ்.

கடந்த காலங்களில், தூத்துக்குடியில் சின்னமணி நகர், தருவை மைதானம், வஉசி கல்லூரி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட இறகு பந்து உள் விளையாட்டு அரங்கங்களானது மிகவும் தரமான முறையில் அமைக்கப்பட்டு தற்போதும் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் தற்போது அமைக்கப்படக்கூடிய இறகு பந்து உள் விளையாட்டு அரங்கமானது தரமற்றதாக அமைக்கப்படுகிறது என திமுகவின் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர் ஒருவரே, திமுக தலைமையிலான தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக பணிகள் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், கடந்த கால அதிமுக ஆட்சியின் நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தையும், தற்போது ஊழல் மலிந்து கிடக்கும் திமுகவின் அவலட்சனத்தையும் அப்பட்டமாக பொதுமக்களுக்கு காட்டும் விதமாக உள்ளது.

எனவே, கடந்த அதிமுக ஆட்சியின் போது நியாயமான, தரமான முறையில் தூத்துக்குடி ஸ்மாட்சிட்டி பணிகள் தற்போதும் தொடர்ந்து நடைபெற வலியுறுத்துகிறோம். இல்லையேனில் தரமற்ற முறையில் ஸ்மாட்சிட்டி பணிகள் தூத்துக்குடியில் நடைபெற்றால், திமுக அரசையும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன்  ஆலோசனையின் பேரில், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் ஆதரவோடு மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

பசுவந்தனை அருகே பெட்டிகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை - 2 பேர் கைது

விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் : அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

  • Share on