பசுவந்தனை அருகே உள்ள பெட்டிகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மணியாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஸ்ரேயா குப்தா மேற்பார்வையில் பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் தலைமையில் மணியாச்சி உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (18.11.2022) பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கவார்நத்தம் பகுதியில் உள்ள அதேபகுதியை சேர்ந்த அருணாச்சலம் மகன் சேர்மராஜ் (60) மற்றும் முத்துசாமி மகன் காமாட்சி (57) ஆகியோருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை செய்ததில், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் சேர்மராஜ் மற்றும் காமாட்சி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 2,430 மதிப்பிலான 5 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.