• vilasalnews@gmail.com

துாத்துக்குடி மாநகர ஓ.பி.எஸ்., அணி புதிய மாவட்ட செயலாளர் நியமனம்!

  • Share on

துாத்துக்குடி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ்., அணி மாவட்ட செயலாளராக ஏசா துரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துாத்துக்குடி அ. தி. மு.க. நகர செயலாளர், எம். ஜி.ஆர். மன்ற செயலாளர் போன்ற பதவிகளை வகித்தவர் ஏசாதுரை. இவர் தற்போது ஓ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க., அணியில் உள்ளார்.

இந்த நிலையில் ஏசாதுரையை தூத்துக்குடி,  ஓட்டப்பிடாரம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தமக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கிய ஓ.பி.எஸ்.க்கு ஏசாதுரை நன்றி தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

பசுவந்தனை அருகே பெட்டிகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை - 2 பேர் கைது

  • Share on