• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வ.உ.சி நினைவு தினம்: மாநகர மாவட்ட காங்கிரஸ் மரியாதை!

  • Share on

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 86வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வஉசி சிலைக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரபோஸ், ஐசன்சில்வா, மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி, மகிளா காங்கிரஸ் மண்டல தலைவிகள் பீரித்தி, சாந்தி, அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்,

மாவட்ட துணை தலைவர்கள் ஏ.டி. பிரபாகரன், சின்னகாளை, ஜாண்சன், அருணாசலம், மாவட்ட பொது செயலாளர் மைக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, அலெக்ஸ், முத்துராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, வெங்கடசுப்பிரமணியன், வார்டு தலைவர்கள் மைக்கேல்பிரபாகர், தனுஷ், மகாலிங்கம், முத்துராஜ், ஜூட்சன் , ராஜரத்தினம், விஸ்வநாதன், முருகேசன், மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி இந்திரா நகர் பகுதியில் கொசு ஒழிக்கும் பணி!

தூத்துக்குடியில் பொதுமக்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட திருநங்கைகள் 4 பேர் கைது!

  • Share on