தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் மாநகராட்சி மூலம் நடைபெற்ற கொசு மருந்து மூலம் கொசு ஒழிக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி நேரில் பார்வையிட்டார்.
தற்போது மழை காலம் என்பதால் தூத்துக்குடியில் பெரிய பிரச்னையாக கொசுக்கள் தொல்லை உருவெடுத்திருக்கிறது. இதனால், தூங்காத கொசுக்கள் மக்களை தூங்க விடாமல் அச்சுறுத்துகின்றது.
மேலும், டெங்கு உள்ளிட்ட நோய்கள் கொசுக்கள் மூலம் பரவுவதை தடுக்கும் விதமாகவும் மக்கள் நோயின்றி வாழவும் இத்தகைய கொசுக்களை ஒழிக்க வேண்டும். எனவே, தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் கொசு மருந்து மூலம் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர் மேற்கொண்டனர். இப்பணிகளை அப்பகுதி மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி நேரில் பார்வையிட்டார்.