• vilasalnews@gmail.com

தூங்காத கொசுக்கள்... தூங்க முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி மாநகர மக்கள்..!

  • Share on

தூத்துக்குடியில் பல இடங்களிலும் கொசுக்கள் தொல்லை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலயே... என்று காமெடி நடிகர் கவுண்டமணி சூரியன் படத்தில் உள்ள ஒரு காமெடியில் ஒமக்குச்சி நரசிம்மனை பார்த்து சொல்வார்.

காமெடி காட்சிக்காக கவுண்டமனி அப்படி சொன்னாலும் உண்மையில் கொசுத்தொல்லை தாங்க முடியாத அளவுக்கு உள்ளது என்பதில் சந்தேகமும் இல்லை.

அதுவும் மழைக்காலங்கள் வந்துவிட்டதென்றால் சொல்லவே வேண்டாம். கொசுக்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும். இந்த கொசுக்களை சமாளிக்க கொசு பேட், கொசுவர்த்தி சுருள் என எத்தனையோ யுக்திகளை நாம் கையாண்டாலும் அதையும் மீறி சில கொசுக்கள் வந்து கடிப்பதை பார்த்து இருக்கிறோம். அதேபோல், பொது இடங்களில் சில நேரங்களில் நம்மை பிரித்து மேயும் அளவுக்கு கொசுக்கள் பதம் பார்த்து விடும்.

தற்போது மழை காலம் என்பதால் தூத்துக்குடியில் பெரிய பிரச்னையாக கொசுக்கள் தொல்லை உருவெடுத்திருக்கிறது. தூங்காத கொசுக்கள் மக்களை தூங்க விடாமல் அச்சுறுத்துகின்றது. 

டெங்கு உள்ளிட்ட நோய்கள் கொசுக்கள் மூலம் பரவுவதை தடுக்கும் விதமாகவும் மக்கள் நோயின்றி வாழவும் இத்தகைய கொசுக்களை ஒழிக்க வேண்டும். எனவே, தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல இடங்களிலும் இரவில் மக்கள் தூங்க முடியாத அளவிற்கு கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

குளத்தூர் ஊராட்சி அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து முகாம் - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

தூத்துக்குடி இந்திரா நகர் பகுதியில் கொசு ஒழிக்கும் பணி!

  • Share on