தூத்துக்குடியில் மளிகை கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 6வது தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் மகாலிங்கம் (42) என்பவர் தனது வீடு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மகாலிங்கம் நேற்று (15.11.2022) இரவு இந்த மளிகை கடையை பூட்டிவிட்டு இன்று (16.11.2022) காலை பார்க்கும் போது மளிகை கடையின் பூட்டை உடைத்து மர்மநபர் யாரோ திருட முயற்சித்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகள் முலம் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த முருகவேல் மகன் விஷ்ணு (22) என்பவர் மேற்படி மகாலிங்கத்தின் மளிகை கடையை உடைத்து திருட முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் வழக்கு பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட விஷ்ணு மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு உட்பட 3 வழக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு முயற்சி வழக்கும், சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என மொத்தம் 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.