தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 153-வது பிறந்த நாள் விழா இன்றூ (நவ.15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வஉசி சாலையில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர் கலந்து கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, மாநகர செயலாளர் உதயசூரியன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.