• vilasalnews@gmail.com

குடியிருப்பு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் போராட்டம்!

  • Share on

தூத்துக்குடி அருகே சிலுவைபட்டியில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பணிகள் நிறுத்தப்பட்டது.

தூத்துக்குடி அருகே சிலுவைபட்டியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செல்போன் டவர் அமைக்கும் இடமானது குடியிருப்புக்கு மத்தியில் அமைய உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகளை முற்றுகையி்ட்டு போராட்டம் நடத்தினர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் ஆகியோர் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர் அமைப்பதனை கைவிட வேண்டும் எனவும் குடியிருப்பு இல்லாத பகுதிகளில் அமைக்கவும் அறிவுறுத்தினர். மேலும் ஏற்கனவே தோண்டப்பட்ட குழி மற்றும் அமைக்கப்பட்ட கம்பிகளை அகற்றிட வேண்டும் என  செல்வோன் நிறுவனத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் உத்தரவிட்டார். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

சிபிஎம் ஒன்றிய செயலாளர் சங்கரன், வழக்கறிஞர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், தங்கபாண்டி, பாலம்மாள்,

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் வேல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன், தாளமுத்துநகர் உதவி ஆய்வாளர்கள் சதிஸ்குமார், முனியசாமி, சமூக ஆர்வலர் சசி, வின்சென்ட், ஜெகதீஸ்வரன், மைக்கேல், வழக்கறிஞர் பால்துரை, அனிஸ்மெல்வின் கௌதம், உள்பட பலர் உடனிருந்தனர்.

  • Share on

கனமழை எதிரொலி : தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு...!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் காணொலிக் காட்சி கலந்துரையாடல்!

  • Share on