• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மாவட்ட நடிகர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு குறும்படம் போட்டி!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட கலையுலக தொழில்நுட்பம் மற்றும் நடிகர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு குறும்பட போட்டி நடைபெறுகிறது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலையுலக தொழில்நுட்பம் மற்றும் நடிகர்கள் சங்கம் சார்பில் கூறுவதாவது :

தென் தமிழகத்தில் முதல் முறையாக தூத்துக்குடி மாவட்ட கலையுலக தொழில்நுட்பம் மற்றும் நடிகர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளும்  மாபெரும் விழிப்புணர்வு குறும்பட போட்டி நடைபெறுகிறது.

இந்த குறும்பட போட்டியில், பெண்கள், சமூகம், மனிதம், இயற்கை, இணைய தள குற்றங்கள், சாலை விபத்து உள்ளிட்டவைகள் தொடர்பான விழிப்புணர்வு சம்மந்தப்பட்டவைகளை உள்ளிடங்கியதாக குறும்பட காட்சிகள் அமைய வேண்டும். அதே போல் அவை 3 முதல் 5 நிமிடங்கள் வரை மட்டும் ஒளிபரப்பாகக் கூடியதாகவும் அமையவேண்டும்.

குறும்படங்களை 10.11.2022 முதல் 15.12.2022 தேதி வரை 7092149081 என்ற டெலிகிராம் எண்ணிற்கு அனுப்பிட வேண்டும். குறும்படப் போட்டிக்கு நுழைவு கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 50,000,  இரண்டாம் பரிசு ரூ.30,000, மூன்றாம் பரிசு ரூ.20,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 22 சிறந்த தொழில்நுட்பம் &  கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளும் பிரபல திரைப்பட இயக்குநர்கள் கரங்களால் வழங்கப்படுகிறது.

29.12.2022 அன்று நடைபெற இருக்கும், தூத்துக்குடி மாவட்ட கலையுலக தொழில்நுட்பம் மற்றும் நடிகர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவின் போது, போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு , போட்டியில் வெற்றி பெறும் குறும்படங்கள் விழாவில் திரையிடப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு  6381663016, 7092149081 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

  • Share on

கிராம நிர்வாக அலுவலகங்களில் பயிர் காப்பீட்டிற்கான சாகுபடி அடங்கல் வழங்கும் பணி தீவிரம்!

கோவிலில் தனி நிர்வாகம் தேச விரோதத்திற்கு நிகரானது: உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து!

  • Share on