• vilasalnews@gmail.com

கிராம நிர்வாக அலுவலகங்களில் பயிர் காப்பீட்டிற்கான சாகுபடி அடங்கல் வழங்கும் பணி தீவிரம்!

  • Share on

கே.குமரெட்டியாபுரம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் வினோத்  விவசாயிகளுக்கு இ சேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்வதற்கு தேவையான சாகுபடி அடங்கலை வழங்கினார்.

விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளான கனமழை மற்றும் வறட்சியினால் மகசூல் பாதிப்பு ஏற்படும்போது அதனை ஈடுகட்டுவதற்கும், விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்கும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை கடந்த 2011 முதல் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்க கிராம நிர்வாக அலுவலரிடம் பயிர் சாகுபடி அடங்கல் பெற்று இ சேவை மையங்களில் விண்ணப்பிப்பார்கள். இதனால் பயிர் சாகுபடி அடங்கல் இன்றைய கால கட்டத்தில் முக்கியமானதாகிவிட்டது.

அதனடிப்படையில் நிலவரி திட்டத்தின்படி அடங்கல் புத்தகத்தில் உள்ள சாகுபடி விபரங்களை  வருவாய்துறையின் அகச்சிடப்பட்ட படிவத்தில் புல எண், பட்டாதாரர் பெயர், அனுபோகதாரர் பெயர், மொத்த பரப்பு, சாகுபடி பரப்பு, போகம், விளைச்சல் என உரிய காலத்தை பூர்த்தி செய்து பயிர் சாகுபடி அடங்கலை கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாயிகளிடம் அளிப்பார்கள்.

விவசாயிகள் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களை  நிலங்களுக்கு நேரில் சென்று கிராம நிர்வாக அலுவலர்கள்  கணக்கெடுப்பு செய்து  நடப்பாண்டு சாகுபடி அடங்கல் புத்தகத்தில் பதிவு செய்வார்கள். அதன்பின் சாகுபடி பயிர்களை கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் சாகுபடி அடங்கல் பெறுவார்கள். இதுவே விவசாயிகள் பயிர் செய்ததற்கான அத்தாட்சியாக கருதப்படுகிறது. 

எனவே, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் உளுந்து,  பாசி பயிர்களுக்கான காப்பீடு செய்வதற்கு நவ.,15 ம் தேதியே கடைசி என்பதால், விவசாயிகளுக்கு இ சேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்வதற்கு தேவையான சாகுபடி அடங்கல் வழங்கும் பணியானது அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில்,  கிராம நிர்வாக அலுவலர் மூலம் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, கே.குமரெட்டியாபுரம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் வினோத்  விவசாயிகளுக்கு இ சேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்வதற்கு தேவையான சாகுபடி அடங்கலை வழங்கினார்.

  • Share on

பசுவந்தனை அருகே அனுமதியின்றி சரள் மணல் திருடிய 2 பேர் கைது - லாரி, ஜேசிபி இயந்திரம் பறிமுதல்!

தூத்துக்குடியில் மாவட்ட நடிகர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு குறும்படம் போட்டி!

  • Share on