பசுவந்தனை அருகே அனுமதியின்றி சரள் மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு, 2 யூனிட் சரள் மணல், லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்
ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி தலைமையிலான வருவாய் துறையினர் நேற்று (09.11.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு கைலாசபுரம் கண்மாய் பகுதியில் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சென்னகம்மன் மகன் காளிராஜா (22) மற்றும் ஓட்டபிடாரம் மேல மங்கலத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பன்னீர்செல்வம் (45) ஆகிய இருவரும் சேர்ந்து எந்தவித உரிய அனுமதியுமின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் சரள் மணல் திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மண்டல துணை தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீதாராம் வழக்கு பதிவு செய்து காளிராஜ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 யூனிட் சரள் மணல், லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.