விளாத்திகுளத்தில் மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், வேம்பார் ரோட்டைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் கோட்டை கருப்பசாமி (22). எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார். இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோட்டை கருப்பசாமி நேற்று வீட்டின் முன் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.