• vilasalnews@gmail.com

காலிப்பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு ரத்து!

  • Share on

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரடி நியமனம் தொடா்பாக 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடா்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் இரா. முத்துக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருந்த அலுவலக உதவியாளா், ஈப்பு ஓட்டுநா், பதிவுறு எழுத்தா் மற்றும் இரவு காவலா் காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த 2019 நவம்பா் 18ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கையானது 2019 டிசம்பா் 2ஆம் தேதி வெளியிடப்பட்டதாலும், கொவைட்-19 காலமாக இருந்ததாலும் பணி நியமனம் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் 2022 செப்டம்பா் 16ஆம் தேதி கடித வழிகாட்டுதலின்படி நிா்வாக காரணங்களின் அடிப்படையில் கடந்த 2019 நவம்பா்18 ஆம் தேதி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை தொடா்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச கதிரியக்கவியல் தினம் கொண்டாட்டம்!

விளாத்திகுளத்தில் வீட்டின் முன் தூக்கிட்டுத் வாலிபர் தற்கொலை!

  • Share on