தூத்துக்குடியில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
தூத்துக்குடி மாநகர் பகுதியான லயன்ஸ்டவுன் ஜெய்கர் தலைமையில் மணல்மேடு லயன்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த 25க்கு மேற்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மாநில துணை தலைவர் சண்முகம், மற்றும் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இனைந்தனர்.
மாநில துணை தலைவர் சண்முகம் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மாநகர தலைவர் முரளிதரன் காங்கிரஸ் உறுப்பினர் அட்டையினை அனைவருக்கும் வழங்கினார். குமார.முருகேசன், முன்னாள் மாநகர தலைவர் அருள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.