• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அமைச்சர் அக்காவும்... மேயர் தம்பியும் தனித்தனியே வலம்!

  • Share on

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனும், மேயர் ஜெகன் பெரியசாமியும் ஆளுக்கொரு பக்கமாய் தீவிரமாக மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் கனமழை பெய்து வெளுத்து வாங்கி, பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வரக்கூடிய சூழலில், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த கால மழை வரலாற்றை திரும்பி பார்த்தால், மழை காலங்களில் மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகரமே பெரும் அவதிக்குள்ளாகி மக்கள் கஷ்டப்பட்டதை யாரும் மறுக்கவும் மாட்டார்கள். மறக்கவும் மாட்டார்கள். அந்த அளவிற்கு மழையின் பாதிப்பை தூத்துக்குடி எதிர்கொண்டுள்ளது. அதன் எதிரொலி தான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தூத்துக்குடிக்கு நேரடியாக வந்து மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு, அடுத்த ஆண்டு இந்த நிலை தூத்துக்குடிக்கு ஏற்படக்கூடாது என்று உத்தரவிட்டுச் சென்றார்.

இதனையடுத்து, தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது வரை அவை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்தகாரர்களை முடுக்கிவிட்டார். அதன் பலனாக மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்குவது பெருமளவில் தடுக்கப்பட்டது.

இருப்பினும், மழைநீர் வடிகால் பணிகள் கட்டிமுடிக்கப்படாத மாநகரின் ஒரு சில பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் நிலை தொடர்கிறது. ஆனாலும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் ஆளுக்கொரு பக்கமாய் தூத்துக்குடி மாநகர் முழுவதும் பம்பரமாய் சுழன்று, மழை நீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து நேரில் பார்வையிட்டு, அதனை மின் மோட்டார், லாரிகள் மூலம் மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் அக்கா ஒருபக்கமும், மேயர் தம்பி ஒருபக்கமும் என இருவரும் சூழன்று, மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து தூத்துக்குடி மக்களை காப்பதற்காக காட்டும் அக்கறை அனைவரிடத்திலும் பாராட்டை பெற்று வருகிறது.

  • Share on

தூத்துக்குடியில் கமலஹாசனின் பிறந்தநாள் விழா - மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழா!

அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளை இலவசமாக வழங்க வேண்டும் : செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

  • Share on