புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரம் பகுதியில் கமலஹாசனின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசனின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரம் பகுதியில் மருத்துவ முகாம் மற்றும் சிறுவர் விளையாட்டு திடலில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் தலைமை தாங்கினார்.
நெல்லை மண்டல வழக்கறிஞர் அணி துணைஅமைப்பாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் நற்பணி இயக்க மாவட்ட பொறுப்பாளர் பிராங்க்ளின், வழக்கறிஞரணி ராஜா, மாநகர செயலாளர் சேர்மதுரை, சிசில்குமார், நற்பணி இயக்க மாநகர அமைப்பாளர் மணிகண்டன், வட்டச் செயலாளர்கள் சீனிவாசன், அசோக், சந்தனம், செல்வம்,
கிளை செயலாளர் மாரிமுத்து, மரம் உரம் ராமர், இளைஞர் அணி நகர அமைப்பாளர் ருபிஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு ஒன்றிய செயலாளர் ராபர்ட் செய்திருந்தார்.