தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பொன் நகரை சேர்ந்தவர் ராமநாராயணன் இவரது மனைவி மீனாட்சி (42), இவர் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மீனாட்சி உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் ராமநாராயணன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி, மீனாட்சியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.