கோவில்பட்டியில் வீடுபுகுந்து நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி, கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் கார்த்திக் ராஜா (31), நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டில் பின்புற கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார்களாம் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கார்த்திக் ராஜா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.