• vilasalnews@gmail.com

எட்டயபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

  • Share on

எட்டயபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 13 வயது பள்ளி மாணவன் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள அம்மா மடம் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மதன்குமார் (13), எட்டயபுரத்தில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டின் ஆட்டுத் தொழுவத்தில் மின் விளக்கு சுவிட்சை போட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சிறுவன் மதன்குமார் பரிதாபமாக உயிரிழந்தான். 

இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share on

பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 20 ஆண்டுகள் சிறை தண்டனை - தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

கோவில்பட்டியில் வீடுபுகுந்து நகை திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

  • Share on