• vilasalnews@gmail.com

பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 20 ஆண்டுகள் சிறை தண்டனை - தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 25,000/- அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் சுடலைமாடன் (57) என்பவர் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2020 ஆண்டு பாலியல் வண்புணர்ச்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து  சுடலைமாடன் என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கை கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் புலன் விசாரணை செய்து கடந்த 29.02.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி  சாமிநாதன் அவர்கள் இன்று (04.11.2022) குற்றவாளியான சுடலைமாடனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாளையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் ஜெபமேரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

  • Share on

ஆட்சி மாறிவிட்டதால் நீதித்துறை செயல்பாடுகள் மாறிவிடாது: அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்!

எட்டயபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

  • Share on