சிறுபான்மையின மாணவ - மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தமிழ்நாட்டில் வசிக்கும் இசுலாமியர், கிறித்துவர், சீக்கியர், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ஆம் கல்வியாண்டில் பள்ளி படிப்பு (ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை)பயிலும் மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கு 15.11.2022 வரையிலும்,
பள்ளி மேற்படிப்பு (11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை) மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி (தொழிற்கல்வி/தொழில்நுட்பக்கல்வி) பயிலும் மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு கால அவகாசம் 30-11-2022 வரை, மத்திய அரசு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தவிர, பேகம் அஸ்ரத் மகால் தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் 15-11-2022 கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி,கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியுள்ள சிறுபான்மை மாணவ/மாணவியர் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.