• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடங்களின் உறுதித் தன்மை ஆய்வு நிலை என்ன?

  • Share on

வடகிழக்கு பருவமழை தொடங்கி  பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டிட உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுவதும், சேதமடைவதும் நடந்து வருகிறது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பழுதான பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பட்டியலிட்டு, அவற்றை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் , பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகாமையில் மழை நீர் தேங்கி சுகாதார சீர் கேடு ஏற்படும் நிலை உருவாகாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தூத்துக்குடியில் ஒரு சில பள்ளிகளின் அருகில் குப்பைகள் கொட்டி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து வரும் தூர்நாற்றம் பள்ளி குழந்தைகளுக்கு சுகாதார பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது என கூறப்படுகிறது. ஆகவே, பள்ளி மற்றும் கல்லூரிகளின் சுற்றுப்புறங்கள் தூய்மையாக இருந்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

அரசு கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையத்திற்கு செல்ல நகர பேருந்து வசதி : பொதுமக்கள் கோரிக்கை

குளத்தூர் அருகே புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது!

  • Share on