• vilasalnews@gmail.com

நாசரேத் பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது!

  • Share on

நாசரேத் பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சியோன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று (01.11.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, நாசரேத் பேருந்து நிலையம் அருகே, நாசரேத் வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சேர்ந்த மந்திரம் மகன் கோவிந்தன் (52) என்பவர் செல்போனில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட வெளிமாநில ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார்  கோவிந்தனை கைது செய்து அவரிடமிருந்த 05 வெளிமாநில ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

முறப்பநாடு அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது!

விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!

  • Share on