
முறப்பநாடு கீழ வல்லநாடு, வல்லாகுளம் பகுதி சேர்ந்த சுடலைமுத்து மனைவி அமுதா (40) என்பவரது வீட்டில் கடந்த 24.09.2022 அன்று 5 சவரன் தங்க நகைகள் திருடுபோனது.
இதுகுறித்து அமுதா அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அமுதாவின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் இசக்கித்துரை (26) என்பவர் மேற்படி அமுதா வீட்டிற்குள் புகுந்து 5 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் இசக்கிதுரையை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 1,50,000 மதிப்பிலான 5 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தார்.