• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் போராட்டம்!

  • Share on

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் அக்கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து கார் மூலம் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விருதுநகர் நோக்கி வந்துகொண்டிருந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் டோல்கேட் அருகே வந்தபோது அவரை சுமார் 40 கார்கள் தொடர்ந்து வந்துள்ளன. இதனால், திருமங்கலம் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செல்லும் டாக்டர் கிருஷ்ணசாமியின் வாகனத்தைத் தொடர்ந்து 4 வாகனங்கள் மட்டுமே செல்ல அமனுமதியளிக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவருடன் காரில் வந்த அக்கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

இதுபற்றி தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி தமிழ்சாலையில் உள்ள தெற்கு காவல் நிலையம் முன்பு  திரண்டு டாக்டர் கிருஷ்ணசாமி கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில், மாநில மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி, மாநகர செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் செந்தூர்பாண்டியன், கொளத்தூர் பெருமாள், முருகன், மாநகர இளைஞரணி பாலமுருகன், மாரியப்பன், ஈஸ்வரி, பஞ்சவர்ணம், மகாராஜன், உலக முத்து, சுப்பிரமணியன் உள்ளிட்ட புதிய தமிழகம் கட்சியினர் பலர் கலந்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • Share on

தூத்துக்குடியில் நீண்ட காலமாக அப்புறப்படுத்தாமல் தேங்கி நிற்கும் மழைநீர்!

முறப்பநாடு அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது!

  • Share on